Pages

Sunday 29 July 2012

பட்டர் சிக்கன்



 
  • எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
  • வெங்காயம் - 2
  • தக்காளி - ஒன்று
  • மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  • மல்லி தூள் - 3 தேக்கரண்டி
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு
  • தயிர் - ஒரு கப்
  • கொத்தமல்லி இலை
  • எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
  • பட்டை - சிறு துண்டு
  • லவங்கம் - 4
  • பிரியாணி இலை - ஒன்று
  • ஏலக்காய் - 2
  • பாதாம் - 7
  • வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி


சிக்கன் துண்டுகளில் எலுமிச்சை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை அனைத்தையும் பொடி செய்யவும். இதை தயிருடன் கலந்து வைக்கவும். இத்துடன் கரம் மசாலா, மல்லி பொடி, சீரக பொடி, மஞ்சள் பொடி எல்லாம் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையையும் சிக்கனுடன் கலந்து வைத்து மீண்டும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
எண்ணெயுடன் 2 மேசைக்கரண்டி வெண்ணெய் கலந்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றி வதக்கவும்.
இதில் சிக்கன் கலவையை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். பாதாமை நீரில் ஊற வைத்து அரைக்கவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் தேவையான நீர் விட்டு பாதாம் விழுதும் சேர்த்து உப்பு சரி பார்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.
சுவையான பட்டர் சிக்கன் தயார். நாண், ரொட்டி, நெய் சாதம் போன்றவைக்கு நல்ல ஜோடி.

0 comments:

Post a Comment