Pages

Sunday 29 July 2012

செய்தி குறிப்பு


சிரியாவில் தொடரும் ராணுவத் தாக்குதல்கள்

பதிவு செய்த நாள் - July 29, 2012 8:18 pm
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து முக்கிய நகரை மீட்பதற்காக, அந்நாட்டு ராணுவம் முழுவீச்சில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
சிரிய தலைநகர் டமாஸ்கசுக்கு வடக்கே உள்ள, சுமார் 25 லட்சம் மக்கள் வசிக்கும் ஆலேப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை மீட்க டாங்கிகள் மூலம் ராணுவத்தினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு உதவியாக ஹெலிகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன் மூலம், முக்கிய பகுதிகளை மீட்டுவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சண்டையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ராணுவ தாக்குதலால் பெரும் உயிரிழப்பு நேரிடும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ள சிரிய கிளர்ச்சியாளர்கள், ஐநா பாதுகாப்பு சபை, கருத்துவேறுபாடுகளைக் களைந்து நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கடும் வறட்சியால் நீர் மட்டம் குறைவு

பதிவு செய்த நாள் - July 29, 2012 4:40 pm
அமெரிக்காவில் கடும் வறட்சி காரணமாக, மிஸிஸிபி நதியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருகின்றன.
மிஸிஸிபி நதியின் நீர் மட்டம் 2 அடி குறைந்துவிட்டதால், படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படகுகள் தரை தட்டாமல் இருப்பதற்காக குறைந்தளவு பயணிகளே படகுகளில் ஏற்றப்படுகின்றனர்.
சில இடங்களில், மிஸிஸிபி நதியில் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு நிலவும் வறட்சியினால் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவகாசம் கேட்கும் மத்திய அரசு

பதிவு செய்த நாள் - July 29, 2012 4:27 pm
2ஜி அலைவரிசை ஏலம் நடத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மீண்டும் ஒரு முறை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் 8 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 122 உரிமங்களை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதில் ரத்தான உரிமங்களுக்கு பதிலாக புதிய உரிமத்திற்கான ஏலத்தை ஜூன் 2ம் தேதிக்குள் நடத்துமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அவகாசம் போதாது என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட மத்திய அரசு, 400 நாள் அவகாசம் தேவை என்றும் கூறியது. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஏலத்திற்கான காலக் கெடுவை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு நீட்டித்தது.
ஆனால் இந்த கால அவகாசத்திற்குள்ளும் ஏலத்தை நடத்தி முடிக்காமல் மீண்டும் ஒரு முறை கால நீட்டிப்பை அரசு கோர உள்ளது. செப்டம்பர் 7ம் தேதிக்குள் உரிமம் முடியும் நிலையில், ஏல தேதி தள்ளிப்போவதால் சிஸ்டமா, யூனிநார், வீடியோகான் ஆகிய நிறுவனங்களுக்கு மேலும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய 2ஜி ஏலத்துக்கான அடிப்படை கட்டணம் நிர்ணயிப்பது, விதிமுறைகளை இறுதி செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் தாமதமாக நடந்து வருவதால் இம்முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தெரிகிறது என இத்தகவலை மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதி கட்ட போரில் இந்திய, தமிழக அரசுகள் கைகோர்த்து நின்றன – அருந்ததி ராய்

பதிவு செய்த நாள் - July 29, 2012 3:30 pm
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இந்திய அரசும், அப்போதைய தமிழக அரசும் கைகோர்த்து நின்றதாக பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார்.
‘காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய போது இதனை குறிப்பிட்டார்.
விழாவில் அவர், நல்ல வாய்ப்புகள் இருந்தும் தமிழக மக்கள் இங்குள்ள இலங்கை முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் அவர், இந்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து போரின்போது இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு விட்டது என்றும் பேசினார்.

0 comments:

Post a Comment