Pages

Sunday 29 July 2012

நண்டு மசாலா



 
  • நண்டு - ஒரு கிலோ
  • பெரிய வெங்காயம் - 3
  • தக்காளி - 3
  • இஞ்சி பூண்டு விழுது - கால் கப்
  • தேங்காய் - அரை கப்
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • தாளிக்க :
  • பட்டை - 3 துண்டு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கிராம்பு - 3
  • எண்ணெய் - தேவைக்கு


நண்டை நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை அரைக்கவும். தேங்காயுடன் சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நண்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நண்டு வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
மல்லிதழை தூவி பரிமாறவும். சுவையான நண்டு மசாலா தயார்.

0 comments:

Post a Comment