Pages

Friday 3 August 2012

ப்ராக்கலி சூப்



 
  • ப்ராக்கலி - ஒரு கப்
  • செலரி - அரை கப்
  • பூண்டு - 2 பல்
  • வெங்காயம் - அரை கப்
  • வெஜிடபுள் ஸ்டாக் - 2 கப் (அ) க்யூப் - ஒன்று
  • சோள மாவு (அ) மைதா - ஒரு மேசைக்கரண்டி
  • கொழுப்பு நீக்கப்பட்ட பால் - ஒரு கப்
  • உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
  • வெண்ணெய் (அ) ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
  • சீஸ் (அ) ஃப்ரெஷ் க்ரீம் - அலங்கரிக்க (தேவையானால்)


ப்ராக்கலி பூவை சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, செலரியை பொடியாக நறுக்கவும். இரண்டு தேக்கரண்டி பட்டர் சேர்த்து உருகியதும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் ப்ராக்கலி பூவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஸ்டாக் இருந்தால் சேர்க்கவும்.
க்யூப் என்றால் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். மிதமான தீயில் மூடி போட்டு பத்து நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் தண்ணீரை தனியாக பிரித்து காய்கறிகளை மட்டும் மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் மீதம் உள்ள பட்டர் சேர்த்து மாவை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் பால் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும். அது அப்படியே கெட்டியாக சாஸ் மாதிரி ஆகும். இது தான் ஒயிட் சாஸ்.
இப்பொழுது அரைத்த விழுது, ஒயிட் சாஸ் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
கொதி வந்ததும் வடிக்கட்டிய தண்ணீரை சேர்க்கவும். உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி சீஸ் அல்லது க்ரீம் சேர்த்து பரிமாறவும்.

செலரி இல்லை என்றால் விட்டு விடலாம். வீட்டில் உள்ள மற்ற காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். விருப்பப்பட்டால் சிக்கன் ஸ்டாக் பாவிக்கலாம். சீஸ் க்ரீம் இல்லை என்றால் பட்டர் சேர்த்தும் பரிமாறலாம்.

0 comments:

Post a Comment