Pages

Friday 20 July 2012

வாழைப்பூ வடை



 
  • வாழைப்பூ - சிறியது ஒன்று
  • கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு
  • இஞ்சி - ஒரு சிறுத் துண்டு
  • பூண்டு - 3 பல்
  • பச்சை மிளகாய் - 2
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - பொரித்தெடுக்க


கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயை வைத்து காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டி காய்ந்துள்ள எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
இரு பக்கங்களும் சிவந்ததும் எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
மொறு மொறுப்பான வாழைப்பூ வடை தயார்.

வாழைப்பூவை மோரில் ஊற வைத்த பின் சமைத்தால் அதிலிருக்கும் சிறுங்கசப்பு நீங்கிவிடும். வாழைப்பூவின் வாசம் தான் இந்த வடையின் சிறப்பு.

0 comments:

Post a Comment