Pages

Wednesday 18 July 2012

கத்தரிக்காய் சாப்ஸ்



 
  • பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ
  • தேங்காய் - அரை மூடி
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - 6
  • சோம்பு - அரை மேசைக்கரண்டி
  • சீரகம் - அரை மேசைக்கரண்டி
  • பட்டை - விரல் நீள அளவு
  • கிராம்பு - 2
  • முந்திரி - 6 எண்ணிக்கை
  • இஞ்சி,பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • முழு தனியா - கால் மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தாளிக்க


தேங்காயை துருவி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை தனித்தனி துண்டுகளாக போடாமல், நான்காக கீறி வைக்கவும்.
அடுப்பில் நாண்ஸ்டிக் பேனை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாசனை பொருட்களை வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
அதே பேனில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி இறக்கி ஆற விடவும்.
மிக்சியில் வதக்கின தேங்காய் கலவையை கொட்டி அதனுடன் தனியாத்தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிறகு வெங்காயம், தக்காளியை அரைத்தெடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, இலை போட்டு நன்கு பொரிய விடவும்.
அவை பொன்னிறமானதும் வெங்காய, தக்காளி விழுதை கொட்டி இரண்டு நிமிடம் வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும், பிறகு அதனுடன் நறுக்கி வைத்த கத்தரிக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் கலவையை ஊற்றி அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் சாப்ஸ் நன்கு கொதித்து சுண்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். அனைத்து சாத வகைகள், சப்பாத்திக்கு பொருத்தமான பக்க உணவு.

0 comments:

Post a Comment