Pages

Monday 23 July 2012

பொட்டுக்கடலை குழம்பு



 
  • பொட்டு கடலை - 5 மேசைக்கரண்டி
  • தக்காளி - ஒன்று (நடுத்தர அளவு)
  • வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)
  • பச்சை மிளகாய் - 3
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • தாளிக்க :
  • எண்ணெய்
  • கடுகு, உளுத்தம் பருப்பு
  • கடலைபருப்பு


தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பை பொரிய விடவும்.
பிறகு பச்சை மிளகாயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின்பு, தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும் போது பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலையை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கலக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி,தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.

0 comments:

Post a Comment