Pages

Monday 23 July 2012

தக்காளி ஊறுகாய்



 
  • தக்காளி - கால் கிலோ
  • காய்ந்த மிளகாய் - 8
  • புளி - சிறு எலுமிச்சை அளவு
  • இஞ்சி - இரண்டு நடுத்தர துண்டுகள்
  • பூண்டு - 10 பல்
  • பெருங்காயம் - கால் தேக்கரண்டி
  • கடுகு
  • எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • வறுத்து பொடிக்க :-
  • வெந்தயம் - கால் தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி


தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவற்றை பெரிய அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெந்தயம், கடுகை எண்ணெய் இல்லாமல் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொரகொரப்பாக தூள் செய்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, மிளகாய், புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துவிட்டு பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக மைய அரைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து பொரிய விடவும்.
பின்பு அரைத்து வைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். ஊறுகாய் எண்ணெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும்போது பொடித்து வைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.

இந்த ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், இட்லி, தோசை போன்றவற்றிக்கு அருமையான காம்பினேஷன்.

0 comments:

Post a Comment