Pages

Saturday 21 July 2012

தக்காளி சாதம்



 
  • பாஸ்மதி அரிசி - அரைக் கிலோ
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 2
  • இஞ்சி - ஒரு பெரிய துண்டு
  • முழு பூண்டு - ஒன்று
  • புதினா - ஒரு கட்டு
  • காய்ந்த மிளகாய் - 8
  • தேங்காய் - ஒன்று
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க :
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2
  • பிரிஞ்சி இலை - 3
  • பட்டை - 2
  • அன்னாசிப்பூ - 2


முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். புதினாவை அலசி வைக்கவும்.
அடுப்பில் நாண் ஸ்டிக் பானை வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டை 2 நிமிடங்கள் வதக்கி, அதோடு தேங்காயை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே பானில் மிளகாயை போட்டு 2 நிமிடம் கருகாமல் வறுத்து எடுத்து தேங்காயோடு சேர்க்கவும்.
மிக்சியில் இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகாய் சேர்த்து அரைக்கவும். அரிசியின் அளவில் இரண்டு கப் அளவுக்கு பால் எடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து தனியே வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய வாசனை பொருட்களை போட்டு பொன்னிறமாக வரும் போது அதில் வெண்ணெய் சேர்க்கவும்.
உருகியதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு புதினாவை சேர்த்து வதக்கி, அதன் பிறகு தக்காளியை சேர்த்து அதில் இருக்கும் நீர் பிரியும் வரை வதக்கவும்.
வெங்காயம் தக்காளியில் இருக்கும் நீர் சுத்தமாக சுண்டியதும் களைந்து வைத்த அரிசியை அதில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் உடையாமல் கிளறவும்.
பின்பு அதனுடன் தேங்காய் பாலை சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி விடவும்.
இரண்டு விசில் வந்ததும் குக்கரை இறக்கி சாதத்தை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைத்து புதினா, கொத்தமல்லி தூவி எலுமிச்சை பிழிந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment