Pages

Saturday 21 July 2012

ப்ரைடு ரைஸ்



 
  • பாசுமதி அரிசி - ஒரு கிளாஸ்
  • கோஸ், குடைமிளகாய், கேரட், பீன்ஸ்
  • பொடியாக நறுக்கியது - ஒரு கப்
  • பச்சைமிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
  • வெண்ணெய் அல்லது நெய் - 2 தேக்கரண்டி
  • வெங்காயத்தாள் - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)


மேலே குறிப்பிட்டுள்ள தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து 2 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பிரஷர் அடங்கியதும் சாதத்தை அகலமான தட்டில் பரத்தி ஆற வைக்கவும்.
கடாயில் நெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் உதிரியாக உள்ள சாதத்தை சேர்த்து குலுக்கவும். மிளகு தூளை தூவி நன்றாக பரவும்படி கலவையை குலுக்கி விடவும். கரண்டியால் கிளறினால் சாதம் உடைந்துவிடும்.
கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment