Pages

Friday 7 September 2012

கடாய் மஷ்ரூம்



 
  • மஷ்ரூம் - ஒரு பாக்கெட்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 1
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 3
  • குடை மிளகாய் - பாதி
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


ஒரு வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
காளானை நறுக்கி கழுவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
சிறிது வதங்கியதும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்பு காளானை போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
காளான் சிறிது வதங்கியதும் தூள் வகைகளை எல்லாம் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
பின்பு தேவையான அளவு நீர் விட்டு மேலே கொத்தமல்லி தூவி காளான் வேகும் வரை கொதிக்க விடவும்.
இன்னொரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி அடுக்கடுக்காக பிரித்தெடுத்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கவும் (பாதி வதங்கும் வரை)
வதக்கிய வெங்காயத்தை காளான் கிரேவியில் கொட்டி கிளறி இறக்கவும்
இப்போது சுவையான கடாய் மஷ்ரூம் தயார். பரோட்டா, சப்பாத்தி, நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment