Pages

Wednesday 1 August 2012

டொமேட்டோ நூடுல்ஸ்



 
  • நூடுல்ஸ் - 100 கிராம்
  • தக்காளி - 2
  • குடைமிளகாய் - 2 சிறியது
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு - இரண்டு பல்
  • வெங்காயத்தாள் - சிறிதளவு
  • டொமேட்டோ சாஸ் - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி


முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, குடைமிளகாய், இஞ்சி, பூண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நூடுல்ஸ் பாக்கெட்டில் போட்டுள்ளபடி தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
வெந்த நூடுல்ஸை ஸ்ட்ரைனரில் போட்டு குளிர் நீரை அதில் ஊற்றி தண்ணீர் முழுவதையும் வடித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, குடைமிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்க்கவும்.
அதனுடன் சிறியதாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி நன்கு மசிந்து கரையும் வரை வேக விடவும்.
இப்பொழுது வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு பிரட்டவும். டொமேட்டோ நூடுல்ஸ் ரெடி.
டொமேட்டோ நூடுல்ஸின் மேல் வெங்காயத்தாள் மற்றும் டொமேட்டோ சாஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்.

0 comments:

Post a Comment