Pages

Wednesday 1 August 2012

ஆம்பூர் சிக்கன் பிரியாணி



 
  • பாசுமதி அரிசி - 2 கப்
  • எலும்புள்ள சிக்கன் - அரைக் கிலோ
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
  • புதினா, கொத்தமல்லி
  • பட்டை - 2 துண்டு
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் - 4
  • பிரியாணி இலை - ஒன்று
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • பிரியாணி மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • தயிர் - ஒரு கப்
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு
  • எண்ணெய் - 5 மேசைக்கரண்டி


அரிசியை கழுவி ஊற வைத்து பாதி பதமாக வேக வைத்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
தக்காளி நன்றாக குழைந்ததும் எலுமிச்சை சாறு, தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
மிளகாய் தூள் பச்சை வாசம் போனதும் தயிர் சேர்த்து பிரட்டவும்.
எல்லாம் நன்றாக கலந்து எண்ணெய் பிரிந்து வரும்.
இப்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து பிரட்டி, மூடி வேக விடவும்.
இப்போது பாதி பதமாக வடித்த சாதம் கலந்து மூடி தம்மில் போடவும்.
15 நிமிடம் தம்மில் போட்டால் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்.

தம் போடும் முறை ஏற்கனவே அறுசுவையில் நிறைய இடத்தில் இருக்கு. விரும்பும் முறையில் போடலாம். சாப்பிட நேரம் ஆகும் பட்சத்தில் அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதில் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் மட்டுமே கூட சேர்க்கலாம். எதை சேர்த்தாலும் மூடி வைத்தே வேக விடுங்க, சிக்கன் மற்றும் மசாலா வாசம் நன்றாக பிரியாணியில் இருக்கும்.

0 comments:

Post a Comment