Pages

Monday 6 August 2012

கறிவேப்பிலை குழம்பு



 
  • கறிவேப்பிலை - அரை கப்
  • சின்ன வெங்காயம் - 15
  • பூண்டு - 10 பல்
  • தக்காளி - ஒன்று
  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  • உப்பு, மஞ்சள் தூள்
  • எண்ணெய் - தேவைக்கு
  • வறுத்து பொடிக்க:
  • துவரம்பருப்பு - அரை மேசைக்கரண்டி
  • கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி
  • உளுந்து - அரை மேசைக்கரண்டி
  • மிளகு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 2
  • தனியா - அரை தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - அரை மேசைக்கரண்டி
  • தாளிக்க:
  • கடுகு, வெந்தயம், எண்ணெய்


வறுத்து பொடிக்க வேண்டிய உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பை தனியாக வெறும் கடாயில் வறுக்கவும்.
மிளகாய் வற்றல், மிளகு, தனியா, சீரகம் இவற்றை தனியாக வறுக்கவும்.
மிக குறைவான தீயில் கறிவேப்பிலை, தேங்காய் துருவலையும் வறுத்து எடுக்கவும்.
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடித்து எடுக்கவும்.
வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் தக்காளியை மிக்ஸியில் சுற்றி எடுத்து ஊற்றி வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியை கலந்து புளி கரைசல் சேர்த்து தேவையான நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பும் கலந்து நன்றாக கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வர கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார். ஆரோக்கியமான கறிவேப்பிலை குழம்பு, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

0 comments:

Post a Comment