Pages

Wednesday 8 August 2012

சிக்கன் பக்கோடா



 
  • எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • காஷ்மீர் மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • சாட் மசாலா - கால் தேக்கரண்டி
  • சீரக தூள் - கால் தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
  • பஜ்ஜி மாவுக்கு:
  • கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
  • கார்ன் ப்ளார் - 3 மேசைக்கரண்டி
  • காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • ஓமம் - சிறிதளவு
  • சோடா உப்பு - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கேசரி பவுடர் - சிறிதளவு


சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். ஷாப்பர் இருந்தால் அதில் சிக்கனை போட்டு கொத்துகறி போல் அரைத்து எடுத்து கொள்ளவும் (அல்லது மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும், 2 அல்லது 3 சுற்றே போதும். நைசாக அரைக்க வேண்டாம்) வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்
அரைத்த சிக்கனுடன் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். உப்பு மட்டும் பக்கோடா செய்வதற்கு முன் சேர்க்கவும்.
பஜ்ஜி மாவுக்கு கூறிய பொருட்களை எல்லாம் கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
கரைத்து வைத்துள்ள மாவில் கையை நனைத்து கொள்ளவும். பிறகு சிக்கன் உருண்டை மேல் கையில் உள்ள மாவை தடவ வேண்டும். (சிக்கனை மாவிற்குள் போட்டு முக்கி எடுக்க வேண்டாம். அப்படி செய்தால் சிக்கனை விட மாவு நிறைய இருப்பது போல் இருக்கும்.)
எண்ணெயில் சிக்கனை பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் பக்கோடா தயார்

0 comments:

Post a Comment