Pages

Wednesday 8 August 2012

சாஸேஜ் ரைஸ்



 
  • வெஜ் சாஸேஜ் செய்ய :
  • கடலை மாவு - ஒரு கப்
  • தயிர் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • புதினா - 10 இலை
  • இஞ்சி - சிறிய துண்டு
  • எண்ணெய் - பொரித்தெடுக்க
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • சாதம் செய்ய:
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • வெங்காயம் - 2
  • உருளை - 2
  • மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இலவங்கம், பெருங்காயம், முந்திரி - தாளிக்க
  • இஞ்சி பேஸ்ட் - 3 தேக்கரண்டி
  • நெய், உப்பு - தேவையான அளவு


சாஸேஜ் செய்ய தேவையானவற்றை ஒன்றாக சேர்த்து பிசையவும். அதிகம் நீர் இல்லாமல் சப்பாத்தி மாவு போன்று பிசையவும். (தயிரில் உள்ள அதிகப்படியான நீரை வடிக்கட்டி விட்டு சேர்க்கவும்).
நீளமாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பொரிந்ததும் ஆறவிட்டு துண்டுகளாக்கவும்.
அரிசியை களைந்து 20 நிமிடங்களாவது ஊற விடவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் உருளை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இப்பொழுது நீரில்லாமல் அரிசியை சேர்த்து உடையாமல் கிளறவும். சிறிதளவு புதினா சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ( 3 1/2 கப்) சேர்த்து உப்பு மற்றும் பொரித்த சாஸேஜ் சேர்த்து வேக விடவும்.
சுவையான வெஜ் சாஸேஜ் ரைஸ் ரெடி. ரைத்தாவுடன் பரிமாறவும்.

தேவையான காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். நான் குழந்தைகளுக்காக செய்ததால் மசாலா அதிகம் சேர்க்கவில்லை. மிளகு சேர்ப்பதற்கு பதிலாக மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்தும் செய்யலாம்.

0 comments:

Post a Comment