Pages

Friday 6 July 2012

குழாய் புட்டு



 
  • பச்சரிசி மாவு - 1 1/2 கப்
  • தேங்காய்ப் பூ - ஒரு கப்
  • சர்க்கரை - ஒரு கப்
  • ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டிக்கும் குறைவாக


தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
பச்சரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசறவும். பிசறிய மாவை, கையில் பிடியாகப் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுதான் சரியான பதம். பொறுமையாக, கட்டியில்லாமல் பிசறி விடவும்.
புட்டுக் குடத்தின் அடிப்பாகத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் கொதிக்க விடவும். மேலே குழாய் போன்ற பாகத்தில், கண்ணுள்ள தட்டு இருக்கும் (ஓமப்பொடி அச்சுப் போல இருக்கும்). அதைப் போட்டு பிறகு பிசறிய மாவு கொஞ்சம், தேங்காய்ப் பூ கொஞ்சம், சர்க்கரை கொஞ்சம் என்று வரிசையாக நிரப்பவும்.
குழாய் முழுவதும் மாவு, தேங்காய்ப்பூ, சர்க்கரை போட்டு நிரப்பவும்.
அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் புட்டுக் குடத்தின் அடிப்பாகத்தின் மேல், மாவு நிரப்பிய புட்டுக் குழாயை வைத்து, மூடி போட்டு மூடவும். மூடியின் மேல் இருக்கும் துளையை அதனுடன் இருக்கும் கம்பியால் மூடவும்.
10-15 நிமிடங்கள் வெந்த பிறகு, நல்ல வாசனை வரும். அடுப்பின் தீயைத் தணித்து வைத்து மூடியைத் திறந்து எவர்சில்வர் கம்பியால் குத்திப் பார்த்து பின் அடுப்பை அணைக்கவும். புட்டுக் குழாயின் பிடியை ஒரு பக்கம் பிடித்து எடுத்து ஒரு தட்டில் அதைப் பொறுமையாகத் தட்டவும். பிறகு வேண்டும் விதத்தில் எடுத்து பரிமாறவும். இதனுடன் நேந்திரம்பழம் அல்லது கடலைக் குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment