Pages

Friday 6 July 2012

காராச்சேவு



 
  • இட்லி அரிசி - ஒரு படி
  • பூண்டு - முழுவதாக ஒன்று
  • வரமிளகாய் - 15 (காரத்திற்கேற்ப)
  • உப்பு - தேவைக்கு (ஒரு கைப்பிடி)
  • கடலைமாவு - கால் கிலோ
  • எண்ணெய் - ஒரு லிட்டர்


அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நன்கு கெட்டியாக அரைக்கவும்.
வரமிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து மிக்சியில் மைய அரைத்து வைக்கவும். (நன்கு மைய இருக்க வேண்டும் இல்லையென்றால் காராச்சேவு பிழியும் பொழுது வெடிக்கும்)
அரைத்த அரிசி மாவுடன் கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்றாக பிசையவும். (மாவு கெட்டியாக இருக்க வேண்டும். உப்பு, காரம் சரிபார்த்துக் கொள்ளவும்)
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காராச்சேவு சாரணியில் மாவை வைத்து கையால் தேய்த்து விடவும்.
நன்கு வெந்து சிவந்ததும், கொதி அடங்கியதும் எடுக்கவும்.
சுவையான காராச்சேவு தயார்.

0 comments:

Post a Comment