Pages

Monday 30 July 2012

செய்தி குறிப்பு


அரசு நிர்வாகம் முடக்கம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் - July 30, 2012 5:02 pm
தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேசிய விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவராகிய தமக்கு உரிய அங்கீகாரத்தை அரசு நிர்வாகமும், முதலமைச்சரும் வழங்கவில்லை என புகார் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள் ஏட்டளவில்தான் இருப்பதாகவும், செயல்பாட்டுக்கு வருவதில்லை என்றும் அவர் கூறினார்.

குஜராத் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் - July 30, 2012 4:09 pm
குஜராத் கலவர வழக்கில் 22 பேரை குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 61 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த அகமதாபாத்திலுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் மெஹ்சானா மாவட்டத்தின் திப்தா தர்வாஜா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ, 3 பெண்கள் உள்ளிட்ட 83 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ உள்ளிட்ட 61 பேரை வழக்கில் இருந்து விடுவித்தார். இதர 22 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதற்கிடையே கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில், சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க வேண்டும் என்ற குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ 50 லட்சம் பரிசு

பதிவு செய்த நாள் - July 30, 2012 8:42 pm
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய உருக்காலைத் துறை அமைச்சர் பெனி பிரசாத் வர்மா தெரிவித்துள்ளார்.
உருக்கு ஆலை விளையாட்டு கவுன்சில் மூலம் இந்த பரிசுத்தொகை வழங்கப்படும்.
வெள்ளி வெல்வோருக்கு ரூ. 25 லட்சம், வெண்கலம் வெல்வோருக்கு ரூ 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என பெனி பிரசாத் வர்மா அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment