Pages

Saturday 30 June 2012

பீட்ரூட் பீஸ் பிரியாணி


 

  • பாஸ்மதி அரிசி-1 கப்
  • பீட்ரூட்-2
  • பச்சை பட்டாணி-கால் கப்,
  • வெங்காயம் -1
  • தக்காளி-1
  • இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
  • பட்டை,கிராம்பு,ஏலம் -தலா இரண்டு
  • சோம்பு-1டீஸ்பூன்
  • பிரியாணி இலை-1
  • பிரியாணி மசாலாத்தூள்-1டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்-1
  • புதினா-ஒரு கைப்பிடி
  • கொத்தமல்லித்தழை-1 கைப்பிடி
  • கறிவேப்பிலை-1 கீற்று
  • மோர்-கால் கப்,
  • நெய்யில் வறுத்த முந்திரி-10
  • உப்பு-தேவைக்கு
  • எண்ணை-1டேபிள்ஸ்பூன்

  • அரிசியை கழுவி 1 1/2 கப் நீரில் ஊறவைக்கவும்.
  • பீட்ரூட்டை துருவி கொள்ளவும்
  • வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும்
  • குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு,சோம்பு
  • பிரியாணி இலையை போட்டு வதக்கவும்
  • வெங்காயம் போட்டு வதக்கவும்
  • வதங்கியதும் ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
  • தக்காளியை போட்டு வதக்கவும்
  • பச்சை பட்டாணியை போட்டு வதக்கவும்
  • பின் பீட்ரூட் துருவலை போட்டு வதக்கவும்
  • பின் புதினா,கொத்தமல்லி இலைகளை போட்டு வதக்கி,மசாலாப்பொடியையும் மோரும் சேர்த்து வதக்கவும்.
  • பின் அரிசி ஊறிய நீர் விட்டு கொதிக்கவிடவும்..
  • கொதிக்கும் நீரில் அரிசியை சேர்த்து குறைவான தீயில் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்
  • ரெடியான பிரியாணியில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்

Note:

காரத்திற்கேற்ப மிளகாயின் அளவை கூட்டி கொள்ளலாம் விரும்பினால் மோருக்கு பதில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் அல்லது 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்... குழந்தைகள் லஞ்ச்பாக்ஸ்க்கு ஏற்ற இந்த பிரியாணியை,பொரித்த அப்பளம் அல்லது வத்தல் வைத்து கொடுக்கலாம்

0 comments:

Post a Comment