Pages

Monday 3 September 2012

பெப்பர் சிக்கன்



 
  • கோழி - 1 கிலோ
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
  • மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
  • சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • அரைக்க
  • =======
  • இஞ்சி - 2 இன்ச் துண்டு
  • பூண்டு - 6 பல்
  • சின்ன வெங்காயம் - 15
  • தாளிக்க
  • =========
  • தேங்காய் எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 3 தண்டு
  • மிளகு தூள் - 2 ஸ்பூன்

  • முதலில் கோழியில் கொடுத்துள்ள தூள்களை எல்லாம் கலந்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து கோழியில் பிரட்டி 2 மணிநேரம் ஊறவிடவும்
  • பின்பு சிக்கனை வேகவிடவும்.மசாலா நன்கு பிரட்டி தண்ணீர் விட்டு பின்பு தண்ணீர் வற்றி ட்ரைய்யாக வந்து சிக்கன் வேந்ததும் சுமார் 30 நிமிடத்தில் தீயை அணைக்கவும்
  • தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலை தாளித்து சிக்கனில் கொட்டி மிளகு தூளை சிறிது அதிகமாக தூவி கலந்து விடவும்

Note:

இதன் சுவை அலாதியாக இருக்கும்.எண்ணை குறைவான மிகவும் சுலபமான குறிப்பும் கூட(கரம் மசாலா சேர்க்க வேண்டாம்).கைதேர்ந்த சமையல் நிபுணரிடம் கற்றுக் கொண்டது அதனால் தைரியமாக செய்து சுவைக்கலாம்.


0 comments:

Post a Comment