Pages

Wednesday 4 July 2012

சிம்பிள் ஃப்ரைட் ரைஸ்



 
  • பச்சரிசி - ஒரு கப்
  • முட்டைக்கோஸ் - 200 கிராம்
  • காரட் - 3
  • பட்டாணி - அரை கப்
  • முள்ளங்கி - ஒன்று
  • பீன்ஸ் - 8
  • குடைமிளகாய் - ஒன்று
  • மிளகுப் பொடி - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்ப
  • ரீஃபைண்ட் ஆயில் - 2 மேசைக்கரண்டி
  • நெய் - அரை மேசைக்கரண்டி


காய்களைக் கழுவி, ஈரம் இல்லாமல் உலர்ந்த பின், தீக்குச்சி அளவில் மெல்லியதாக நறுக்கவும்.
எண்ணெய், நெய், மிளகுப் பொடி, உப்பு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பச்சரிசியை 3-4 முறை களைந்து, தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய காய்களை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
ஊறிய பச்சரிசியை, ஒரு வெள்ளைத் துணியில் கொட்டி தண்ணீரை வடிய விட்டு எடுத்து வைக்கவும்.
பிறகு குக்கரில் வதங்கிய காய்களுடன், அரிசியையும் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு, 2 கப் தண்ணீர் ஊற்றி, நெய்யையும் சேர்க்கவும். குக்கரை மூடி, 3 விசில் மட்டும் வர விடவும்.
குக்கர் ஆறிய பின் பிரஷர் குறைந்ததும் திறந்து, மிளகுப் பொடி, உப்பு சேர்த்து, கலந்து விடவும். ரைத்தா, சன்னா மசாலா, க்ரீன் பீஸ் மசாலாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

முட்டைக்கோஸ், குடை மிளகாய் இவை இரண்டும் ஃப்ரைட் ரைஸுக்கு சுவையும் வாசமும் தரும். வெங்காயத் தாள் கிடைத்தால் சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment