Pages

Friday 27 July 2012

சோயா கிரேவி



 
  • சோயா (வேக வைத்து பிழிந்து 2 அல்லது 4 துண்டுகளாக நறுக்கியது) - ஒரு கப்
  • வெங்காயம் (பெரியது) - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - சிறிது
  • கடுகு
  • பட்டை - ஒன்று
  • அன்னாசி மொக்கு - ஒன்று
  • கிராம்பு - ஒன்று
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
  • மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  • சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • கேசரி பவுடர் - சிறிது
  • சோயா சாஸ்
  • சில்லி சாஸ்


குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை, கிராம்பு, அன்னாசி மொக்கு போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்
பிறகு தூள் வகைகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். பிறகு கேசரி பவுடர், உப்பு போட்டு கிளறவும்.
இப்போது வேகவைத்து நறுக்கிய சோயாவை சேர்த்து வதக்கவும்.
குக்கரை மூடி வேக விடவும். பின்னர் 5 நிமிடம் குக்கரை சிம்மில் வைத்து பிறகு திறக்கவும்.
பின்னர் அதில் சோயசாஸ், சில்லி சாஸ் கலந்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான மற்றும் சத்தான சோயா கிரேவி தயார். இதை சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

0 comments:

Post a Comment