- பட்டை பிரவுன் காளான் - 2
 - சிகப்பு உருளை - 2
 - பட்டாணி - ஒரு கைப்பிடி
 - தக்காளி - 2
 - பச்சை மிளகாய் - 2
 - கறிவேப்பிலை - 10 இதழ்
 - சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி
 - இஞ்சி - ஒரு வில்லை
 - மஞ்சள் பொடி - சிறிது
 - மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
 - கடுகு - சிறிது
 - உப்பு - தேவைக்கு
 - எண்ணெய் - தாளிக்க
 
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி, உருளை, காளானை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். 
 | |
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சோம்பை போட்டு தாளிக்கவும். 
 | |
பின் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். 
 | |
தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கவும். 
 | |
அதில் தேவையான உப்பும், பொடி வகைகளை சேர்த்து பின் பட்டாணியை சேர்க்கவும். 
 | |
ஐந்து நிமிடம் கழித்து காளானை சேர்த்து வதக்கவும். 
 | |
பின் உருளையை சேர்த்து சுருள வதக்கி விடவும். 
 | |
சுவையான காளான் தக்காளி கறி ரெடி. 
 | 
0 comments:
Post a Comment